கழனிப் பானையில் கையைவிடும் குஷ்பு !
பத்திரிகையாளர்களைப் பார்த்தால் ‘ என்ன பாஸ் எப்படியிருக்கீங்க..? சொல்லுங்க சகோ... நீங்க இல்லாம நானெல்லாம் வந்திருக்க முடியுமா?” என்றெல்லாம் கொஞ்சி தாம் சம்மந்தப்பட்ட செய்திகளைக் கொண்டுவர வைத்துவிடுவார் குஷ்பு.
வேலை முடிந்தால் ஊடகத்தினரைத் திரும்பிக் கூட பார்க்கமாட்டார். ஆனால், இவரது கணவர் சுந்தர்.சி இவருக்கு அப்படியே நேர்மாறானவர். ஊடகத் துறையினரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்பவர்.
இப்போது அவர் புசம் ஒரு ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. அதனைக் கேட்டால் நீங்களே புரிந்துகொள்வீர்கள். என்னாச்சு இப்படி பேசுது இந்த குஷ்பு அக்கா.. என்று நினைப்பீர்கள். தொலைக்காட்சித் தொடர் தொழில் முடக்கம் நீங்க மறுபடியும் படப்பிடிப்பு நடத்துவதற்காக அனுமதி வாங்குவதற்காக தலைமை செயலகத்துக்கு நடையாக நடந்த போது முதல்வர், அமைச்சர் என அத்தனை பேரையும் பார்த்து விட்டு பத்திரிகையாளர்களிடம் வேண்டுகோள் வைத்து வந்தார்.
அப்போதெல்லால் இனித்த பிரஸ்காரர்களை இப்போது அரசு அனுமதி கிடைத்தவுடன் மரியாதை இல்லாமல் பேசுகிறார். படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் இல்லாமல், பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் பணி புரிவது குற்றம். அப்படிதான் அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால், ‘பிரஸ்காரனுக்கு வேற செய்தியே இல்ல; அதனால் முகமுடி போடுங்க. இல்லன்னா பிரஸ்காரன் எடுத்துப் போட்டுருவான்’ என்று மரியாதை சிறிதும் இன்றி தனது படப்பிடிப்பு ஆட்களுக்கு உத்தரவிடுலது தெளிவாகப் பதிவாகியுள்ளது அந்த ஆடியோவில்.
திருமதி. குஷ்பு சுந்தர் அவர்கள் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிய ஆடியோ பதிவால் அவரை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து உடனே மாற்றி புதிதாக ஒருவரை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக தகவல். சங்க பொதுக்குழுவை உடனே கூட்டவேண்டும் என்று மூத்த தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.