நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

 

பனிமூட்டமான நிலை

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Heavy Rain With Lightning Thunder Weather Report

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு பிரிவுகளிலும், வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.