மன்னாரில் ஆசிரியை தாக்கியதில் தரம் 5 மாணவி வைத்தியசாலையில்!

மன்னாரில் ஆசிரியை தாக்கியதில் தரம் 5 மாணவி வைத்தியசாலையில்!

​மன்னாரில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவர், வகுப்பாசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான விசேட வகுப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வகுப்பாசிரியர் கேட்ட கேள்வி ஒன்றிற்குச் சிறுமி தவறான பதிலளித்ததாகக் தெரிவிக்கப்படுகின்றது.

 

ஆத்திரமடைந்த வகுப்பாசிரியர்

இதனால் ஆத்திரமடைந்த வகுப்பாசிரியர், சக மாணவர்கள் முன்னிலையிலேயே சிறுமியின் கன்னத்தில் பலமாக பல தடவைகள் அறைந்துள்ளார்.​

ஆசிரியரின் இந்தத் தாக்குதலால் சிறுமியின் கன்னத்தில் காயங்கள் ஏற்பட்டு இரத்த கண்டல்களும் ஏற்பட்டுள்ளது.

 

மன்னாரில் ஆசிரியை தாக்கியதில் தரம் 5 மாணவி வைத்தியசாலையில்! | Mannar Grade 5 Girl Hospitalized After Assault

இதையடுத்து உடனடியாகப் பெற்றோர்களால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட சிறுமி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.​

தற்போது சிறுமி வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சிறுமியைத் தாக்கிய ஆசிரியை மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இது தொடர்பாகப் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.