இன்றைய ராசி பலன் 02 ஜூன் 2026
மேஷம் ராசி பலன்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை மற்றும் தொழில் தொடர்பாக திட்டமிட்டு செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வணிக ரீதியான சவால்களை தாண்டி நிச்சயம் வெற்றிகரமாகக் கடந்து வருவீர்கள். உங்களுக்கு உதவி தேவைப்படும்போது சக நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். சிறு பணிகளைக் கூட மிக கவனமாக செய்யவும். தற்போது உங்களுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நபர்களை அறிந்து கவனமாக செயல்படுவது நல்லது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று, பணியிடத்தில் நீங்கள் சில சிரமங்களை எதிர் கொள்ளக்கூடும். ஒரே நேரத்தில் பல பணிகளை நீங்கள் கையாள வேண்டியிருக்கும் என்பதால், சில சிரமங்களையும், பணிச் சுமையை உணர்வீர்கள். இன்றைய நாள் கலவையான பலன்களைத் தரக்கூடியதாக அமையும். காலத்திற்கு ஏற்ப உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதும், திட்டங்களை மாற்றிக் கொண்டு துணிந்து செயல்படவும். எந்த சூழலையும் எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம்.
மிதுனம் ராசி பலன
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலத்திற்குப் பிறகு, இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும். இதனை மனதில் கொண்டு வரும் நாட்களை பயனுள்ள வகையில் சரியான விதத்தில் பயன்படுத்தவும். இன்றைய புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் செயல் மற்றும் பேச்சில் கவனம் செலுத்தவும்.இந்த உடல் நலனில் கவனம் தேவை.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வேலை அல்லது தொழில் தொடர்பாக பல திட்டங்களை வகுத்து வைத்து செயல்படுவீர்கள். இன்று கல்வி, வேலை தொடர்பாக பயணங்கள் செல்ல வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய தொழிலை விரிவு படுத்துவதற்கான புதிய தொடர்புகள், கூட்டாளிகள் கிடைப்பார்கள். சில நாட்களாக நிறுத்தி வைத்திருந்த முயற்சிகள், திட்டங்களை மீண்டும் தொடங்குவார்கள். நீண்ட காலம் எதிர்பார்ப்புகள் முழுமையாக பூர்த்தி அடைய வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள பணிகளை இன்று முடிக்க முடியும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் தொழில் அல்லது அலுவலகப் பணிகளுக்கு மேலாக, உங்களுடைய குடும்பப் பொறுப்புக்கள் மீது கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். உங்களுடைய காதல் விஷயத்தில் நிதானமாகவும், அக்கறையுடன் இருக்கவும். இன்று உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக புதிய பாதை கண்டறிவீர்கள். இன்று எதிலும் அதே உழைப்பு தேவைப்படும். தேவையற்ற விரயம் அல்லது பொழுது போக்கு தொடர்பாக நேரம் செலவிடுவீர்கள்.இன்று உங்களுடைய கருத்துக்களை மற்றவர் மீது திணிப்பதை தவிர்க்கவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில், ஆக்கப்பூர்வமான கலை அல்லது படைப்பு முயற்சிகளில் கவனம் செலுத்துவீர்கள். இருப்பினும் அதைவிட உங்களுடைய காதல், குடும்ப உறவுகள் மீது அக்கறை காட்ட வேண்டிய நாள். இன்று நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் குடும்பத்தினரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அன்புக்குரியவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆலோசனைகளை பொறுமையாக கேட்டு குறிப்பு எடுத்துக் கொள்வது நல்லது. இது உங்களுடைய தலைமைத்துவத்தை மேம்படுத்தும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக சிறிய உடல் நல பிரச்சினைகளை கூட கவனமாக நிவாரணம் காண முயற்சி செய்யவும். தொழில் தொடர்பாக இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். சில வேலை தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு கவலை தர வாய்ப்பு உண்டு. நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கும். அவசரப்பட்டு பொருட்களை வாங்குவது அல்லது முதலீடுகளை தவிர்க்கவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். சூழலை மனதில் கொண்டு திட்டமிடுவதும், நிதானமான செயல்படும் அவசியம். காதல், குடும்ப உறவுகளில் அன்பும், சில விருப்பம் ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உங்களுடைய வாழ்க்கையில் சில உறுதியற்ற மனநிலை சலிப்பை ஏற்படுத்தும். பங்கு சந்தை அல்லது பயங்கரமான முதலீடுகளை தவிர்க்க வேண்டிய நாள். வரவு செலவு திட்டங்களை மதிப்பாய்வு செய்து, தேவையற்ற செலவுகளை குறைக்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று காதல் மற்றும் உறவுகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். திருமண வாழ்க்கையில் துணையின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். வேலை தொடர்பாக மிகுந்த சிரமம் சந்திக்க நேரிடும் மற்றும் அதிக உழைப்பு தேவைப்படும். காதல் உறவில் உள்ளவர்கள் அதை திருமண பந்தமாக மாற்றும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதில் செலவுகள் அதிகரிக்கும். குழுவாக செய்யக்கூடிய பணிகள் எதிர்பார்த்த வெற்றியை தரும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் திருமண வாழ்க்கை மற்றும் பெற்றோர்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வேலை தொடர்பாக கூடுதல் முயற்சி தேவைப்படும். உங்களுடைய அர்ப்பணிப்பான செயல்பாடு உங்களுக்கு பாராட்டு, அங்கீகாரத்தை பெற்று தர வாய்ப்பு உண்டு. உங்கள் வீட்டில் மிகவும் அமைதியான சூழல் நிலவும். இது உங்கள் எதிர்காலத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொண்டு வரும். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று எந்த செயலிலும் முழுமையான நம்பிக்கை வைத்து செயல்படவும். செலவுகள் மற்றும் செயல்பாடுகளில் கட்டுப்பாடு அவசியம். இன்று நண்பர்களிடம் அல்லது அண்டை வீட்டாரிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சில திடீர் விஷயங்களில் கோபத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு நிதிநிலை ரீதியாக முன்னேற்றம், ஆதாயத்திற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். ஆசையை நிறைவேற்ற செலவு செய்ய வேண்டியது இருக்கும். இன்று யாருக்கும் பணம் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குரு பகவானின் அருளால், நீங்கள் பணியிடத்தில் நீங்கள் குறிப்பிடத்தக்க புகழையும் அங்கீகாரத்தையும் பெற முடியும். உங்கள் பணியில் சரியான அர்ப்பணிப்பு, தீவிரத்துடன் செயல்பட்டால், நீங்கள் முன்னேற்றத்தின் மிக உயர்ந்த சிகரங்களைக்கூட எட்டக்கூடும். காலமும், சூழ்நிலையும் உங்களுக்குத் தொடர்ந்து சாதகமாக அமையும். உங்கள் மன உறுதியுடன் எந்த ஒரு செயலையும் செய்வது நல்லது. எதிர்கால முதலீடுகளைத் திட்டமிட அல்லது முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட இது ஒரு நல்ல நாள்.