Virushka Moment: அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி பறக்கும் முத்தம்.. ரசிகர்கள் உற்சாகம்
"one felt nice, we did it twice" என்று எழுதப்பட்ட ஒரு சிறப்பு T-shirt அணிந்திருந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி IPL 2026 சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான தருணத்தை வழங்கினர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்தில் IPL 2026 இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி ஆகிய இரு அணிகள் மோதின.
இதில், விராட் கோலி 42 பந்துகளில் 75 ரன்கள் என்ற அபாரமான ஆட்டத்தின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி, RCB அணி IPL 2026 பட்டத்தை வென்றது.
கோலி, 16 இன்னிங்ஸ்களில் 56.25 சராசரி மற்றும் 165.84 ஸ்டிரைக் ரேட்டுடன், ஒரு சதம், ஐந்து அரைசதங்கள் மற்றும் 105 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 675 ரன்கள் குவித்து, இந்தத் தொடரில் நான்காவது அதிக ரன் எடுத்த வீரராகத் திகழ்ந்தார்.
தொடக்கத்திலிருந்தே அனுஷ்கா ஷர்மா பார்வையாளர் அரங்கில் இருந்து தன் கணவரை உற்சாகப்படுத்தினார். வெற்றியை உறுதிசெய்த பிறகு, உடனடியாக பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்த அனுஷ்கா ஷர்மாவுக்கு flying kiss கொடுத்தார்.
இந்நிகழ்வு ரசிகர்களுக்கு மற்றுமொரு மறக்கமுடியாத "virushka" தருணம் என்பதால், இதன் வீடியோக்களும் படங்களும் சமூக ஊடகங்களில் விரைவாக வைரலாகின. பின்னர், அகமதாபாத்தில் நிரம்பியிருந்த ரசிகர் கூட்டத்தின் முன்னிலையில் ஆர்சிபி வீரர்கள் ஐபிஎல் கோப்பையை உயர்த்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனைதொடர்ந்து, அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலியின் ஒரு படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் "one felt nice, we did it twice" என்று எழுதப்பட்ட ஒரு சிறப்பு T-shirt அணிந்திருந்தார்.
இது அவரது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம் அளித்தது. இந்த சீசனின் ஆர்சிபியின் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற போது, பார்வையாளர் அரங்கில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அனுஷ்காவை நோக்கி flying kiss கொடுத்து வெற்றியைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.