இன்றைய ராசி பலன் 31 மே 2026:

இன்றைய ராசி பலன் 31 மே 2026:

மேஷம் ராசி பலன்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று தர்ம காரியங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கடினமான சூழலை கூட, உங்கள் நல்ல நடத்தையால் சூழ்நிலையை அமைதிப்படுத்த முடியும். உங்கள் துணைவரின் உடல் நலனில் சிறிது குறைபாடு ஏற்படலாம். இதன், காரணமாக இரவில் சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களுடைய படைப்பாற்றல் என்று மேம்படக்கூடிய நாளாக இருக்கும். கல்வி, நிதி துறையில் வல்லுனர்களின் ஆலோசனை வெற்றியை தரும். வும் உங்கள் விளக்குகளை அடைவதில் கவனம் செலுத்தவும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு இனிமையான நாளாக அமையும். அதிர்ஷ்டவசமாக, பிற்பகலுக்குள் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் உடல் நலத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மாலையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு விருந்தினரின் வருகையால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இரவில் ஒரு சுப நிகழ்வில் கலந்துகொள்வது உங்கள் கௌரவத்தை அதிகரிக்கும். இன்று எதிலும் ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தந்தையின் ஆசீர்வாதங்களாலும், மேலதிகாரிகளின் அருளாலும், நீங்கள் நினைத்த விஷயங்களை அடைய முடியும். ஏதேனும் ஒரு மதிப்பு மிக்க பொருட்களை வாங்குவதுள்ளது சொத்து பெறுவதற்கான ஆசைகள் நிறைவேறும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். வண்டி, வாகனங்களை பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவை. வாகனத்தை நிதானமாக இயக்கவும். அன்புக்குரியவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் சந்திப்பது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். உங்கள் மனைவியிடமிருந்து நீங்கள் விரும்பிய பலன்களைப் பெறலாம்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்றைய கிரகங்களின் சிறப்பான நிலை உங்களுக்கு திடீரென பெரிய தொகை கிடைப்பதற்கான நலவாய்ப்புகள் உண்டு. இது உங்களுடைய நிதி நிலையை வலுப்படுத்தும். வணிகத்திட்டங்கள் வேகம் அடையும். சமூகத்தில் உங்களுடைய கௌரவம் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயங்களுக்காக அவசரப்படுவது, உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மனம் ஈடுபடும். தொழில் வல்லுனர்களின் ஆலோசனை உங்களுடைய தொழிலை முன்னேற்ற உதவும். வேலையில் மூலம் எதிர்பார்த்த நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு இருக்கக்கூடிய முயற்சிகள் நல்ல வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் மீதான பொறுப்புக்கள் நிறைவேறும். போட்டி மற்றும் கல்வி தொடர்பாக நிசரப்பான பலனை பெறலாம். நீண்ட நாட்களுக்கு தடைபட்ட வேலைகள் முடியும். செருமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு கண்கள் தொடர்பான சில தொந்தரவுகள் ஏற்படும். இன்று சில அன்புக்குரியவர்களே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று, வேலையில் காட்டும் விடாமுயற்சி சிறப்பான பலன்களைத் தரும். நீங்கள் குடும்பத்தை கவனிப்பதிலும், குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நல்ல வாய்ப்பையும் பெறுவீர்கள். நீங்கள் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பாதகமான சூழ்நிலைகள் ஏற்பட்டால் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்களின் இனிமையான பேச்சு குடும்பப் பிரச்சனைகள் தீர்க்கப்படும். உங்களுக்கு அரசாங்க உதவியும் கிடைக்கும். மாலை நேரத்தில் திடீர் ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.புதிய நபர்களின் தொடர்புகள் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று, கல்வி மற்றும் போட்டித் துறைகளில் சிறப்பான சாதனைகள் புரிய வாய்ப்புள்ளது. புதிய வருமான வழிகள் உங்கள் பெறுவீர்கள். உங்களுடைய சிறப்பான பேச்சாற்றல் மரியாதையைப் பெற்றுத்தரும். பரபரப்பான வேலைக்கு இடையில் உங்களுடைய உடல் நலனையும் கருத்தில் கொள்வது அவசியம். சிலருக்கு உடல் நலம் பாதிப்பு தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கைத்துணையிடமிருந்து உங்களுக்குப் போதுமான ஆதரவும், துணையும் கிடைக்கும். பயணங்களும், உல்லாசச் சுற்றுலக்களும் இனிமையாகவும், பயனுள்ளதாகவும் அமையும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் நிதி நிலைமை வலுவடையும் என்பதால், உங்கள் செல்வம், மரியாதை, புகழ் மற்றும் நற்பெயர் ஆகியவை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்; உங்களுடைய அன்புக்குரியவர்களைச் சந்திப்பீர்கள். இன்று உங்களின் பேச்சின் மீது போதிய கட்டுப்பாடு கடைபிடிக்கவிட்டால், அது பாதகமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கலாம். மாலையில் நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பதோடு, ஒரு மகிழ்ச்சியான உல்லாசச் சுற்றுலாவையும் மேற்கொள்வீர்கள்.உங்களுடைய பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்ற தெளிவுடன் செயல்படுவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டு உபயோகப் பொருட்களுக்காகப் பணம் செலவிடப்படும். உலகியல் இன்பங்களை அனுபவிப்பதற்கான வழிகள் பெருகும். உங்கள் கீழ் பணிபுரிபவர் அல்லது ஒரு உறவினர் மூலம் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. நிதி சார்ந்த பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் இருங்கள்; சில இடங்களில் பணம் முடங்கிப்போகும் வாய்ப்புள்ளது. அதனால் பணம் விஷயத்தையும் கவனமாக இருக்கவும். பகல் பொழுதில், அரசு சார்ந்த விவகாரங்களுக்காக நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல நேரிடலாம்; இருப்பினும், இறுதியில் வெற்றியே உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு எதிராகத் தீட்டப்படும் சதித் திட்டங்கள் அனைத்தும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று, தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் நிதி நிலைமை முன்பை விட வலுவாக இருக்கும். தொழில் அல்லது பணித்துறையை மாற்றிக்கொள்வதற்கான திட்டங்கள் நல்ல பலனை தரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்; குடும்ப பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றப்படும். மாலையில், ஒரு புனிதத் தலத்திற்குச் செல்ல திட்டமிடுவீர்கள்; வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையுடன் இருங்கள்; எதிர்பாராத வாகனப் பழுதுகள் காரணமாகச் செலவுகள் அதிகரிக்கலாம்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதியான சனி பகவான் குடும்பம், தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்கள் துணைக்குதிடீரென உடல்நலக்குறைவு ஏற்படலாம்; இது குடும்ப விஷயத்தில் தொந்தரவு தரக்கூடியதாகவும், பரபரப்பான சூழலையும், செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் ஒரு சொத்து வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு முன்பு, அச்சொத்து தொடர்பான அனைத்துச் சட்டப்பூர்வ அம்சங்களையும் கவனமாகப் பரிசீலிக்கவும். மாலை நேரத்தில் உங்கள் மனைவியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும்.
 

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் திருமண வாழ்க்கை தரக்கூடியதாக இருக்கும். இன்று நீங்கள் அருகிலோ அல்லது நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. வேலை, தொழில் தொடர்பாக செல்லும் பயணம் நல்ல பலனை தரும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக கூடுதல் கவனத்துடன் இருக்கவும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் நலனை தரும். இன்று பெற்றோரின் அறிவுரை மற்றும் ஆசீர்வாதம் பெரிய அளவில் உங்களுக்கு உதவியாக இருக்கும். இன்று எந்தவித ஆடம்பரப் பொருட்களையும் வாங்குவதில் செலவுகளை செய்ய வேண்டாம்.