புது அம்ங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜூம் செயலி
பிரபல வீடியோ காலிங் செயலியான ஜூம் புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜூம் செயலியில் புதிய ஆடியோ மற்றும் வீடியோ அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த அப்டேட்டில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி பயனர் அனுபவத்தை மேம்படுத்தி உள்ளது. புதிய அப்டேட்டில் விர்ச்சுவல் மீட்டிங்ஸ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புதிய ஃபில்ட்டர்கள், வீடியோ கால்களில் மேம்பட்ட லைட்டிங் மற்றும் ஆடியோ கால்களுக்கு மேம்பட்ட நாய்ஸ் சப்ரெஷன் வழங்கப்பட்டு உள்ளது. வீடியோ கால் பேசும் போது அலுவலகத்தில் இருக்கும் அனுபவம் கிடைக்காமல் இருந்தது. விர்ச்சுவல் மீட்டிங் அனுபவத்தை புதிய அம்சங்கள் மேம்படுத்தும் என ஜூம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஜூம் செயலியில் புதிய அம்சங்கள் சமீப காலங்களில் வழங்கப்படாமல் இருந்தது. தற்சமயம் அழைப்புகளின் செக்யூரிட்டியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எனினும், போட்டியை எதிர்கொள்ள ஜூம் புதிய அம்சங்களை வழங்கி உள்ளது.
புதிய நாய்ஸ் செட்டிங் ஜூம் செயலியின் செட்டிங் பகுதியில் உள்ளது. இவற்றை லே, மிட் மற்றும் ஹை என பயனர் விருப்பப்படி செட் செய்து கொள்ளலாம். இதேபோன்று ஜூம் வீடியோ செட்டிங்களில் லைட்டிங் மற்றும் பேக்கிரவுண்ட்டை மாற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
முன்னதாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் ஆயிரம் பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட்டது. கூகுள் மீட்ஸ் சேவையிலும் புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் என்க்ரிப்ஷன் மற்றும் இதர அம்சங்களை வழங்கும் பணிகளில் ஜூம் ஈடுபட்டு வருகிறது.