இன்றைய ராசி பலன் 26 ஏப்ரல் 2026: சூரிய உச்சம் – ராசிகளுக்கு ஏற்படும் தாக்கம்

இன்றைய ராசி பலன் 26 ஏப்ரல் 2026: சூரிய உச்சம் – ராசிகளுக்கு ஏற்படும் தாக்கம்

இன்று ஏப்ரல் 26, 2026 ஞாயிறு கிழமை, பங்குனி மாதம் 13ம் தேதி, சிம்ம ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்ய உள்ளார். இன்று மரண யோகம் உள்ள தினம். இன்று மேஷத்தில் உச்சம் பெற்ற சூரியன் ஆற்றலை தருவார். இன்று மகரம் ராசியில் உள்ள உத்திராடம் பின்பு திருவோணம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று, சந்திரன் ஐந்தாம் இடமான முக்கிய திரிகோண வீடான, புண்ணிய ஸ்தானத்தில் ஒரு வலுவான சேர்க்கையை உருவாக்குகிறது. உங்களுக்கு ஒரு முக்கியமான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்பு உண்டு. அரசு வேலை செய்பவர்கள் அல்லது அரசாங்கத்திடமிருந்து சிறப்பான கௌரவம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்களுக்கு செல்வம் மற்றும் பொருள் சேர்க்கை பெறுவீர்கள். இன்று மாலை நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய செலவுகளை சுப செலவாக மாற்றும் முயற்சியில் ஈடுபடவும். சமூகத்தில் உங்களுடைய நற்பெயர் உயரும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் கவனம் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் இருக்கும். இன்று ஒரு புனித ஸ்தலத்திற்கு செல்லும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். எந்த விதமான சட்ட வழக்குகளிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று வேலை அல்லது வீடு மாறுவது தொடர்பான முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். நாளின் பிற்பகுதியில் சிக்கல் ஆன சூழல் இருந்தாலும் உங்கள் தைரியம் உங்களுக்கு கை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை மற்றும் சுபமாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் உங்களுடைய சூழல் சாதகமாக இருக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். இன்றைய நாள் கலைத்துறை அல்லது புதிய படைப்புகளை படைக்கும் பணியில் உங்களுடைய முயற்சிகள் அதிகரிப்பீர்கள். கடினமான சூழல் இருந்தாலும் இன்று ஓரளவு ஓய்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் மனதில் புதிய யோசனைகள், திட்டங்கள் தோன்றும். பணியிடத்தில் உங்களுடைய மேலதிகாரிகளின் ஆதரவை பெற முயற்சி செய்யவும். இது சூழலை சாதகமாக மாற்ற உதவும். இன்று உங்களுடைய பணத்தை கவனமாக பயன்படுத்துவது நல்லது.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாள். நீங்கள் செய்யக்கூடிய அர்ப்பணிப்பு உங்களுக்கு நல்ல பலனை தரும். இன்று உங்கள் வீட்டில் சில முக்கியமான விவாதங்கள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுடைய யோசனை சாதகமான சூழலை மற்றும் மரியாதையை பெற்றுத் தரும். இன்று சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று நீங்கள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் உங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருந்தாலும், ஆன்மீக விஷயங்களுக்காக சிறிது நேரம் செலவிடுவது உங்களுடைய மனதை அமைதியாக்கும். இன்று மங்களகரமான செயல்களில் உங்களுடைய நேரம் கழியும். இன்று உங்களுடைய பணத்தை கவனமாக பயன்படுத்துவோம். முதலீடு தொடர்பான விஷயங்களை ஆராய்ச்சி செய்வீர்கள். இன்று பணம் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அமைதியான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறை சூழலை சாதகமாக மாற்றும். நிதி ஆதாரங்கள் ஸ்திரத்தன்மையுடன் இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பேச்சில் நிதானத்தையும் எச்சரிக்கையையும் கடைபிடியுங்கள். மற்றவர்களுடன் மோதலில் ஈடுபடாமல் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் வீட்டில் சில மங்களகரமான நிகழ்வுகள் நடத்துவது குறித்து விவாதிப்பீர்கள். இன்று உங்கள் விதியை நம்புவதை விட உங்களுடைய கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைக்கவும். மாலை நேரம் உங்களுடைய சூழல் மேம்படும். இன்று உங்கள் பழைய முதலீடுகளில் இருந்து கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் தேவையற்ற செலவுகள் உங்களை தொந்தரவு தர வாய்ப்பு உண்டு.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நன்மை பயக்கும் நாள். இன்று உங்களுடைய வேலை தொடர்பாக இருக்கும் தடைகள் மற்றும் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட முயற்சி செய்யவும். இன்று சொத்து தொடர்பாக இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்க்கும் பேச்சு வார்த்தை வெற்றியடையும். உங்களுடைய திறமை பெரிய அளவில் கை கொடுக்கும். நிதி ஆதாயம் மேம்படுத்தும் எந்த ஒரு முயற்சியும் நல்ல பலனை தரும். உங்களுடைய உடல் நலனை மேம்படுத்தும் முயற்சிகளில் அக்கறை செலுத்தவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று நிதிநிலையைப் பொறுத்தவரை இன்று வலுவான நாளாக அமையும். நாள் முழுவதும் லாபகரமான வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கும். எனவே சுறுசுறுப்பாக செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய குடும்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையையும் அனுபவியுங்கள். உங்களுடைய வேலை அல்லது தொழில் தொடர்பாக புதுமையே புகழ்த்துவது எதிர்காலத்தில் நன்மைகளை தரக்கூடியதாக அமையும். உங்களுடைய வேலையில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உங்கள் தொழிலில் திடீர் மாற்றங்கள் கொண்டுவர நினைப்பீர்கள். சிக்கலை தாண்டி புதிய வாய்ப்புகளை தேடுவீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய குறிப்பிடத்தக்க உங்களுக்கு லாபத்தை தரும். உங்கள் அன்றாட வழக்கத்திற்கு அப்பாற்பட்டு எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு நற்பெயரை பெற்று தரும். இன்று அன்புக்குரியவர்களுக்காக சிறிது பணம் ஏற்பாடு செய்ய வேண்டியது இருக்கும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய புதிய வாய்ப்பு சரியாக பயன்படுத்துவது உங்களுடைய அடையாளத்தை மேம்படுத்தும். சமூகத் தொடர்பு அதிகரிக்கும். உங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையக்கூடிய நாள்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சாதகமானநாள். கூட்டணி வைத்து வியாபாரம் செய்யக்கூடிய விஷயங்களில் மிகவும் நியாபகரமாக அமையும். அன்றாட குடும்ப பொறுப்புகள் மற்றும் வேலை சரியாக முடிக்கும் பொன்னான வாய்ப்புகள் ஏற்படும். இன்று உங்கள் பிள்ளைகள் சம்பந்தமாக பெரிய முடிவை நீங்கள் எடுக்க வேண்டியது இருக்கும். இன்று எதிலும் நேர்மை மற்றும் நிதானமாக செயல்படுவது அவசியம். ஒரே நேரத்தில் பல வேலை இல்லை செய்ய வேண்டிய சூழலால் பதட்டம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல்நலம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். பருவநிலை மாற்றத்தால் உடல் நல பிரச்சினைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு. வியாபார விஷயங்களில் சூழல் சற்று கடினமாக அமையலாம். இன்று அவசர செயல்பாடு அல்லது முடிவுகள் தவறுக்கு வழிவகுக்கும். இதயம் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய வேலை மற்றும் பேச்சில் தெளிவாக இருப்பது நல்லது. வருமானம் தொடர்பாக ஸ்திரமான தன்மை இருக்கும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்படும் இடர்களை நேர்மறையான மனநிலையுடன் செயல்பட்டால் தீர்க்க முடியும். இன்று உங்கள் புத்திசாலித்தனமான செயல்பாடு உன் எப்பொழுதும் இல்லாததை விட சூழலை சாதகமாக மாற்ற உதவும். இன்று கடினமான சூழலில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு உதவுவீர்கள். உங்கள் தொழில் தொடர்பாக நீங்கள் சில மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உங்களின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.