இன்றைய ராசிப்பலன் (16.4.2026)!
இன்று (16) மீன ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மீனத்தில் 3 கிரகங்களின் சேர்க்கையும், மேஷத்தில் உச்ச பலன் தரும் சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்து சஞ்சரிக்கும் யோகம் உருவாகிறது.தருகின்றனர். இன்று சிம்ம ராசியில் உள்ள பூரம் பின்பு உத்திரம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று போதாயண அமாவாசை.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் லட்சியங்கள் நிறைவேறும்; அதனால் இன்று கூடுதல் முயற்சி செய்ய வேண்டிய நாள். கூடுதல் வருமானத்திற்கான பகுதி நேர பணிகளை தொடங்க முயற்சிக்கவும். போராட்டங்களை தாண்டி உங்கள் துன்பங்களில் இருந்து ஓரளவு நிம்மதி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் திரும்பும். சில நாட்களாக தொடர்ந்து வரும் நிதி நெருக்கடிகளிலிருந்து நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள். ஏதேனும் ஒரு காரணத்திற்காக, இன்று நீங்கள் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் குடும்பத்தினருடன் ஒரு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடுவீர்கள். உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள நீண்ட காலம் பலன் அளிக்கும் முதலீடு அல்லது சேமிப்பில் ஈடுபடவும். அவசியமான பொருட்களை மட்டும் வாங்குவது, செலவு குறைப்பது கவனம் செலுத்தவும். என்ற உங்கள் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். சில முயற்சிகள் உங்களுக்கு திடீர் திருப்புமுனையாகவும், வேலையை வேகமாக முடிக்கவும் உதவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மிக வேகமாக முன்னேறிச் செல்வதற்கான தருணமாகும். உங்கள் எதிர்பாராத முன்னேற்றத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். சில நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் முடிக்க முடியும். இன்று உங்கள் பேச்சு மற்றும் செயல்பாடுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். இல்லையெனில் நட்பு இருக்கு பாதிப்பு ஏற்படலாம். உங்களுடைய தேவையற்ற கௌரவத்திற்காக அதிக செலவு செய்வது அல்லது சில அலைச்சலை தவிர்ப்பது அவசியம். உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம் ராசி பலன்
கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய குடும்பத்தினரின் நலனுக்காக மிகுந்த அக்கறையுடன் சில விஷயங்களை செய்வீர்கள். மேலும், இன்று நாள் முழுவதும் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியைப் பராமரிப்பதிலேயே கழியும். இன்று சிலரின் பேச்சு உங்களுடைய மனக்கலக்கத்திற்கு ஆளாகலாம். சில நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு அல்லது இடமாற்றம் சாத்தியப்பட வாய்ப்பு உண்டு. இன்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். அதே சமயம் குருவின் ஆசிர்வாதத்தில் முக்கிய வருமானம் பெற வாய்ப்பு உண்டு.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று, வணிகம் சார்ந்த விஷயங்களில் கவலை சற்று அதிகமாகவே வாழும். கடந்த சில காலமாக உங்களுடைய வேலை,தொழில் எவ்வித ஒழுக்கற்ற செயலில் ஈடுபடாமல் இருக்கவும். இதனால் நிலையற்ற தன்மையை உணர்வீர்கள். உங்கள் வேலை மற்றும் தொழில் தொடர்பாக சரியான திட்டமிடலுடன் செயல்படுவதும் மற்றும் சோம்பல், சுக பாவங்களை துறந்து செயல்படுவது முன்னேற்றத்தை தரும்.இன்று யாருக்கும் பணமும் கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதி நோய், எதிர் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சற்று மாறுபட்ட சூழலை தரும். வேலையை எதிர்பார்த்த விதத்தில் முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். உங்கள் முதலீடு மற்றும் முயற்சிகள் பயனுள்ளதாக அமையும். இன்று உங்கள் பணிகளை முழு உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். இன்று நீங்கள் சிறந்த ஒப்பந்தத்தை பெற வாய்ப்பு உண்டு. உங்கள் தொழில் அல்லது வேலையை எளிதாக்கும் விதத்தில் சில கருவிகளையும் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று, எவ்விதக் காரணமுமின்றியே ஏற்படக்கூடிய கவலையான் மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள். சுக்கிரனின் தாக்கம் காரணமாக சில பிரச்சனைகள் தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. இன்று சமூகப் பணியை மற்றும் தொழில் துறை தொடர்பாக பல எதிரிகளை எதிர்கொள்ள நேரிடும்.
இன்று எதிலும் தைரியத்துடனும் மற்றும் ஞானத்துடன் செயல்படுவது கடின சூழலை வெல்ல உதவும். உங்கள் மனம் பலவீனங்களையும் தீய பழக்கங்களையும் கைவிடுவதில் உறுதியாக இருக்கவும். இன்று பண பரிவர்த்தனை விஷயத்தில் நிதானமாகவும் பாதுகாப்பான அணுகுமுறையை கடைபிடிக்கவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். உங்கள் வேலை அல்லது வியாபாரம் தொடர்பாக ஏற்படும் மன அழுத்தம் சோர்வை தரும். நிலையற்ற சூழலை சமாளிக்க புதிய திட்டங்கள் உதவும். இன்று பழைய சச்சரவுகள் மற்றும் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குடும்பத்திலும் பணியிடத்திலும் நல்லிணக்கம் அதிகரிக்கும். மேலும் மனதிற்கு சோர்வு, கவலை தரக்கூடிய விஷயங்களை அனுமதிக்காதீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு சாதகமானதாக அமையும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று, ஒரு புதிய நபரின் அறிமுகம் உங்களுக்கு நன்மையை தரும். உங்கள் கடந்த காலத்தைப் பற்றிய ஆய்வு அல்லது தவறுகளை உணர்வது பயனுள்ளதாக அமையலாம். சில நாட்களாக முடங்கிக் கிடந்த பணத்தை திரும்ப பெறுவது சற்று கடினமாக அமையும். உங்கள் அன்றாட கடமைகளை செய்வதில் சோர்வு காட்டாதீர்கள். தொழில் ரீதியாக முன்னேற்றம் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாலை நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று,சமூகப் பணியை மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு உண்டு. உங்களுடைய மதிப்பு உயரக்கூடிய நாள். கிரகங்களின் சஞ்சாரம் உங்கள் அதிர்ஷ்டத்தை மேம்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலை கொண்டுவரும். தொழில் தொடர்பாக கொள்முதல் மற்றும் விற்பனை சார்ந்த விஷயங்களில் லாபம் அமையும். இன்று நாள் முழுவதும் நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பர்களுடன் கலகலப்பான நேரத்தை செலவிடுவீர்கள். இன்று தேவையற்ற பேச்சு மற்றும் சிக்கலை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய தாய் வழி சொந்தங்கள் மூலம் ஆதரவு கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும், பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் நெருங்கிய தொடர்பில் இருப்பது நல்ல பயன் தரும். ஏற்றுமதி - இறக்குமதி தொழில் செய்யக்கூடியவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் அனுகூல பலனை தரக்கூடியதாக அமையும். உங்கள் நேரத்தை திட்டமிட்டும், பயனுள்ள விஷயங்களுக்காகவும் செலவிடுவது நல்லது. சந்திரனின் அமைப்பு மனக்குழப்பம் அல்லது சிலரின் மூலம் தவறான ஆலோசனையை நம்ப தூண்டும். அதனால் கவனமாக இருக்கவும்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் அதிபதியான குருவின் அருள் நிறைந்ததாக இருக்கும். இது உங்கள் வேலை மற்றும் தொழில் தொடர்பாக முன்னேற்றத்திற்கான பல வழிகளை திறக்க விடவும். கல்வி மற்றும் ஆன்மீகம் தொடர்பாக ஆர்வம் அதிகரிக்கும். இன்று எந்த வித சர்ச்சைக்குரிய விவகாரங்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. மறைமுகமாக எதிரிகளின் பிரச்சனைகளை மாணிக்க வேண்டியது இருக்கும். இன்று நீங்கள் கொடுத்த பணம் திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படும். முடிந்தவரை கடன் கொடுப்பதை தவிர்க்கவும். பெற்றோருக்கு மற்றும் ஆசிரியருக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்தவும்.