அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி! 4ஆவது போட்டியிலும் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ்

அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி! 4ஆவது போட்டியிலும் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ்

ரோயல்ஸ் செலன்ஞர் பெங்களுரு அணிக்கிடையிலான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் 16ஆவது போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.

இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ்- ரோயல்ஸ் செலன்ஞர் பெங்களுரு அணிகள் விளையாடி மோதின.

மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இருந்த போதிலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

ரோயல்ஸ் செலன்ஞர் பெங்களுரு

 

ராஜஸ்தான் ரோயல்ஸ் நாணயசுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பில் சால்ட், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆர்ச்சர் முதல் ஓவரை வீசினார்.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே சால்ட் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். 7 பந்தில் 14 ஓட்டங்கள் சேர்த்து தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார்.

rrvsrcb

 

16 பந்தில் 7 பவுண்டரியுடன் 32 ஓட்டங்கள் சேர்த்து விராட் கோலி ஆட்டமிழந்தார். ஆர்சிபி பவர்பிளேயில் 3 விக்கெட் இழப்பிற்று 61 ரன்ள் எடுத்திருந்தது.

குருணால் பாண்ட்யா 1 ஓட்டங்களில்ன ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த வீரர்கள் ஜித்தேஷ் சர்மா (5) டிம் டேவிட் (13), ரொமாரியோ ஷெப்பர்டு (22) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். என்றாலும் கேப்டன் ரஜத் படிதார் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடினார்.

விக்கெட்டுகள் விழுந்ததால் பேட்டர் வெங்கடேஷ் ஐயர் இம்பேக்ட் சப் வீரராக களம் இறங்கினார். 35 பந்தில் அரைசதம் அடித்த ரஜத் படிதார், 18-வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி! 4ஆவது போட்டியிலும் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் | Rcb Vs Rr Rr Vs Rcb Vaibhav Sooryavanshi

 

அவர் 40 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 63 ஓட்டங்கள் எடுத்தார். 9-வது விக்கெட்டுக்கு வெங்கடடேஷ் ஐயருடன் புவி ஜோடி சேர்ந்தார்.

இறுதியில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் குவித்தது.

வெங்கடேஷ் ஐயர் 15 பந்தில் 29 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய் மற்றும் ப்ரிஜேஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் சந்தீப் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 

202 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடினார்.

அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி! 4ஆவது போட்டியிலும் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் | Rcb Vs Rr Rr Vs Rcb Vaibhav Sooryavanshi

இவர் 28 பந்துகளில் 78 ஓட்டங்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய துருவ் ஜூரெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ராஜஸ்தான் சார்பில் கடைசி வரை களத்தில் இருந்த ஜூரெல் 43 பந்துகளில் 81 ரன்கள் (8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) குவித்தார்.

அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி! 4ஆவது போட்டியிலும் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் | Rcb Vs Rr Rr Vs Rcb Vaibhav Sooryavanshi

போட்டி முடிவில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளது.