இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா

முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணப் முகர்ஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் அண்டு வரை இவர் இந்தியாவின் ஜனாதிபதியாக செயலாற்றிரந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

84 வயதான இவரக்கு கொரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து இவர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சொதணைகளை அடுத்த இவரக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து, அவருடன் தொடர்பை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தலக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றைய நாளில் மாத்திரம் 62 ஆயிரத்து 117 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்து 14 அயிரமாக அதிகரித்துள்ளது.

அதேபோல், நேற்றைய நாளில் மாத்திரம் 1013 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து இந்தியாவில் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 44 அயிரத்து 466 ஆக அதிகரித்தது.