பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அதிகரிக்கப்பட்டது சம்பளம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அதிகரிக்கப்பட்டது சம்பளம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் இம்மாதம் முதல் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் 1750 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை என்பது பல வருடங்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவே இருந்து வந்தது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அதிகரிக்கப்பட்டது சம்பளம்! | Salary Hike For Upcountry Workers

இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் மூலம் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தது.

பெருந்தோட்ட கம்பனிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்துக்கமைய இம்மாதத்திலிருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.