கிழக்கு மாகாணத்தில் பதிவான மழைவீழ்ச்சி தொடர்பில் வெளியான தகவல்

கிழக்கு மாகாணத்தில் பதிவான மழைவீழ்ச்சி தொடர்பில் வெளியான தகவல்

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (9) காலை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பதிவான மழைவீழ்ச்சி தொடர்பில் வெளியான தகவல் | Report Released On Eastern Province Rainfall

அதேநேரம் நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் 10 மி.மீ. க்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 28 நீர்த்தேக்கங்களும், அதேபோல் 22 நடுத்தர அளவிலான குளங்களும் இன்னும் வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யான் ஓயா மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் எந்தவொரு ஆற்றுப் பள்ளத்தாக்கிலும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் வகையில் நீர் வெளியேற்றப்படவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.