மூன்று மாவட்ட மக்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

மூன்று மாவட்ட மக்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் உள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நேற்று (05.01.2026) இரவு 10:00 மணி முதல் இன்று(06.01.2026) பிற்பகல் 1:00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை-1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தின் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மூன்று மாவட்ட மக்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | Landslide Warning For Residents Of Three Districts

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.