உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்...! மக்களுக்கு மீண்டும் நெருக்கடி

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்...! மக்களுக்கு மீண்டும் நெருக்கடி

நாட்டில் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்புள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் இந்தநிலை ஏற்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்‌ஷன் தெரிவித்துள்ளார்.

உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு, முட்டை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், தொழில்துறையை பராமரிப்பது மிகவும் நெருக்கடியாகி உள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்...! மக்களுக்கு மீண்டும் நெருக்கடி | Food Price Will Increase In Sri Lanka

பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் ஒரு கிலோவின் விலை 2,000 ரூபாயாகவும், பீன்ஸ் ஒரு கிலோவின் விலை 1,000 ரூபாயாகவும், தக்காளி, கரட் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை ஒரு கிலோவின் விலை 600 முதல் 7000 ரூபாய் வரை இருக்கும் என ஹர்ஷனா ருக்‌ஷன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலை இருந்தபோதிலும், உணவு மற்றும் பானங்களின் விலையை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.