லிட்ரோ எரிவாயு குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

லிட்ரோ எரிவாயு குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்திற்கு 2026 ஆம் ஆண்டிற்கான திரவ பெற்றோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக நிதி ஏலங்கள் கோரப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டின் கொள்வனவு வழிகாட்டல்களின் விதிமுறைகளுக்கு அமைய, இரட்டை உறை முறையின் கீழ் தொழில்நுட்ப மற்றும் நிதி ஏலங்கள் கோரப்பட்டுள்ளன

அதன்படி, 05 ஏலதாரர்கள் ஏலங்களை சமர்ப்பித்திருந்த நிலையில், அவற்றில், 02 ஏலங்கள் தொழில்நுட்ப மதிப்பீட்டிற்குப் பின்னர் நிதி ஏலங்கள் மதிப்பீட்டிற்காகத் தகுதிபெற்றுள்ளன.

லிட்ரோ எரிவாயு குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம் | Important Announcement Of Lytro Company

உயர் மட்டத்திலான நிரந்தர கொள்வனவுக் குழு மற்றும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபை சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில், 2026 ஜனவரி மாதம் முதல் 12 மாத காலப்பகுதிக்குத் தேவையான 380,000 மெட்ரிக் தொன் (+ 20%) திரவ பெற்றோலிய எரிவாயுவை லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்துக்குக் கொள்வனவு செய்வதற்கான பிரேரணையை Geo Gas Trading S.A. நிறுவனத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.