தண்ணீர் போத்தல்களை கூடுதல் விலைக்கு விற்றவர்களுக்கு 25 மில்லியன் அபராதம்

தண்ணீர் போத்தல்களை கூடுதல் விலைக்கு விற்றவர்களுக்கு 25 மில்லியன் அபராதம்

 போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலையில் விற்ற வியாபாரிகளுக்கு 25 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வியாவாரிகள் மீது இவ்வாறு 25 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான ஆறு மாத காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தண்ணீர் போத்தல்களை கூடுதல் விலைக்கு விற்றவர்களுக்கு 25 மில்லியன் அபராதம் | 25 Million In Fines Imposed On Vendors

அந்த ஆறு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 306 சுற்றி வளைப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில் அதிகமானவை கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்காலத்திலும் இத்தகைய சட்டவிரோத விற்பனைகளை தடுக்கும் நோக்கில் தொடர்ச்சியான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.