பரிதாபமாக உயிரிழந்த பேருந்துப் பயணி! சாரதி அதிரடி கைது

பரிதாபமாக உயிரிழந்த பேருந்துப் பயணி! சாரதி அதிரடி கைது

தும்முல்லை பகுதியில் இருந்து கிருலப்பனை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்கத்தில் இருந்து விழுந்து 53 வயது பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி காவல் பிரிவுக்குள்பட்ட ஹேவ்லாக் வீதியில் உள்ள பி.ஆர்.சி மைதானத்திற்கு அருகில் நேற்று (14) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அதன்போது, படுகாயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் பலத்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பரிதாபமாக உயிரிழந்த பேருந்துப் பயணி! சாரதி அதிரடி கைது | Passenger Dies After Falling Off Bus

சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பம்பலப்பிட்டி காவல்றையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.