கார் மோதி யாசகர் பரிதாப பலி

கார் மோதி யாசகர் பரிதாப பலி

அநுராதபுரம் பிரதான வீதியில் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்று வீதியில் இருந்த யாசகர் மீது மோதியதில் படுகாயமடைந்த யாசகர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் மோதி யாசகர் பரிதாப பலி | Beggar Dies Tragically After Being Hit By Carஉயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து காரின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.