போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில்..! பொலிஸ் எச்சரிக்கை

போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில்..! பொலிஸ் எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, ஹபரணை பகுதியில் மூன்று போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹபரணை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் 02 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில்..! பொலிஸ் எச்சரிக்கை | A Warning From The Police

மேலும் விசாரணையின் போது, ​​பிஹிம்பியகொல்லேவ பகுதியில் இன்று 138 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு்ள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஒரு மடிக்கணினி, ஒரு ஸ்கேனர் மற்றும் ஒரு அச்சுப்பொறியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 42 வயதுக்குட்பட்ட ஹபரணை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,

மேலும் தினசரி பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.