இலங்கையில் பெரும் துயரம் - பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் உயிரிழப்பு

இலங்கையில் பெரும் துயரம் - பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் உயிரிழப்பு

கண்டி, உடுதும்பர தலகுனே பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதான தாய் உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

34 வயதான கணவர் 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் 12, 10 மற்றும் 5 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பெரும் துயரம் - பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் உயிரிழப்பு | Mother Dies After Poisoning 3 Children

எனினும் பிள்ளைகள் தற்போது உடுதும்பர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணும் மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.