
O/L பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் 2025 ஒக்டோபர் 09 வரை ஒன்லைனில் கோரப்படும் என கல்வி அமைச்சு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து பாடசாலை விண்ணப்பதாரர்களும் தங்கள் விண்ணப்பங்களை தங்கள் பாடசாலை அதிபர்கள் மூலமாக விணண்ப்பிக்க முடியும் எனவும் தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை இல்லாத தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் பாதுகாவலரின் (தாய் அல்லது தந்தை) தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic க்குச் சென்று, தொடர்புடைய வழிமுறைகளைப் படித்து அதன்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பங்களை சரியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.