900 கோடி ரூபாயை மோசடி செய்த இரண்டு பேருக்கு நீதிமன்றின் உத்தரவு

900 கோடி ரூபாயை மோசடி செய்த இரண்டு பேருக்கு நீதிமன்றின் உத்தரவு

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களின் இரண்டு பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று(16) உத்தரவிட்டார்.

மகேஷ் பிரியந்த அகலகமகே மற்றும் சந்திக்க யசநாத் பண்டார வீரகோன்  என்ற இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

900 கோடி ரூபாயை மோசடி செய்த இரண்டு பேருக்கு நீதிமன்றின் உத்தரவு | Two People Who Defrauded 900 Crore Rupees

அத்துடன் சம்பவத்தின் 10வது சந்தேகநபரான உதய புஷ்பகுமாரவை ரூ.2.5 மில்லியன் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடை செய்த நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், அவருக்கு கடவுச்சீட்டு இல்லையாயின் அதற்கான ஆதாரங்களை பிரமாணப் பத்திரம் மூலம் வழங்கவும் உத்தரவிட்டார்.

900 கோடி ரூபாயை மோசடி செய்த இரண்டு பேருக்கு நீதிமன்றின் உத்தரவு | Two People Who Defrauded 900 Crore Rupees

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணை பிரிவு, இதுபோன்ற மோசடி சம்பவங்கள் தொடர்பாக நீர்கொழும்பு மற்றும் பொலன்னறுவை நீதிமன்றங்களில் இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.