மட்டக்களப்பில் மீளா துயரை ஏற்படுத்திய விசேட சத்திர சிகிச்சை நிபுணரின் மரணம்

மட்டக்களப்பில் மீளா துயரை ஏற்படுத்திய விசேட சத்திர சிகிச்சை நிபுணரின் மரணம்

மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (13) காலாமானார் .

திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர், மட்டக்களப்பு மக்களாலும் போதனா வைத்தியசாலை சமூகத்தாலும் நல்ல மனிதராக பார்க்கப்படுகிறார்.

மட்டக்களப்பில் மீளா துயரை ஏற்படுத்திய விசேட சத்திர சிகிச்சை நிபுணரின் மரணம் | Batticaloa Mourns Death Of Specialist Surgeonதனது வைத்தியத் திறமையினால் நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.