சந்தேகத்துக்கிடமான முறையில் வீட்டில் உயிரிழந்த குடும்பப் பெண்

சந்தேகத்துக்கிடமான முறையில் வீட்டில் உயிரிழந்த குடும்பப் பெண்

மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் உறங்கியுள்ள நிலையில், இன்று அதிகாலையில் நீண்ட நேரமாகியும் எழும்பாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து, பெண்ணின் கணவர், அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள நிலையில், வைத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரியவந்துள்ளது.

சந்தேகத்துக்கிடமான முறையில் வீட்டில் உயிரிழந்த குடும்பப் பெண் | Family Woman Found Dead In Matale

இது தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.