மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

ஹட்டன் - சாஞ்சிமலை பகுதியில் மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சாஞ்சிமலை பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சாரதி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்துள்ளது.

மதுபோதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது | Driver Arrested For Driving Bus While Intoxicatedஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.