காதலியை கொலை செய்ய முயன்ற காதலனின் நெகிழ்ச்சியான செயல்

காதலியை கொலை செய்ய முயன்ற காதலனின் நெகிழ்ச்சியான செயல்

மொனராகலை, கோவிந்துபுர பகுதியில் பிரிந்து சென்ற காதலியை சுடச் சென்ற காதலன், வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

காதலியின் முகத்தைப் பார்த்து பரிதாபப்பட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயது பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இருவரும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர் மொனராகலை நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணி புரிகிறார். அவர் வேறொரு இளைஞனுடன் உறவில் இருப்பதாக முன்னாள் காதலனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

காதலியை கொலை செய்ய முயன்ற காதலனின் நெகிழ்ச்சியான செயல் | Boy Friend Planned To Kill His Girl Friend

இதனால் கோபமடைந்த முன்னாள் காதலன், குறித்த பெண் வீட்டிலிருந்து தொழிற்சாலைக்கு செல்லும் போது கொலை செய்ய முயன்றுள்ளார்.

ஆனால் அவரது முகத்தைப் பார்த்து பரிதாபப்பட்டு, பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்த நிலையில் பொலிஸார் அவரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.