கிரிந்த கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு
அம்பாந்தோட்டை, கிரிந்த காவல் பிரிவுக்குட்பட்ட கிரிந்த கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிரிந்த காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று (26) விசாரணை நடத்தியபோது இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டவருக்கு 60 முதல் 70 வயதுக்கு இடையில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
அவர் சுமார் ஐந்து அடி உயரமும், கருமையான நிறமும், நடுத்தர உடல்வாகும் கொண்டவர்.

சடலம் தெபரவெவ மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கிரிந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.