கிழக்கு பல்கலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே உச்சக்கட்ட மோதல்!

கிழக்கு பல்கலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே உச்சக்கட்ட மோதல்!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Eastern University) இரு மாணவர் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த மோதலில் ஆறு மாணவர்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றின் போதே இம்மோதலின் தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

 

புதிய மாணவர்கள்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

காயமடைந்தவர்களில் ஐந்து பேர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகத்திற்கு (Student Authorities) எதிரான பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு பல்கலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே உச்சக்கட்ட மோதல்! | Clash Between Student Groups At Eastern Uni

ஆறாவது மாணவர் ஒன்றிய நிர்வாகத்திற்கு ஆதரவான பிரிவைச் சேர்ந்தவர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவொன்றுடன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகத்தை எதிர்க்கும் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சூழல் பதற்றமாக மாறியுள்ளது.

 

விரிவான விசாரணை

நிலைமை கைமீறிச் சென்ற போது, நிகழ்வில் பங்கேற்ற ஏனைய மாணவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.

இதையடுத்து, இசை நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் விடியற்காலை வேளையில் நிர்வாக எதிர்ப்புப் பிரிவு மாணவர்கள் தங்களது தங்குமிடங்களுக்கு திரும்பிச் சென்ற போது மீண்டும் அவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

கிழக்கு பல்கலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே உச்சக்கட்ட மோதல்! | Clash Between Student Groups At Eastern Uni

இதன்போது இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டதில் 6 மாணவர்கள் பலத்த காயமடைந்து உடனடி மருத்துவ உதவிக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகமும் காவல்துறையினரும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைதியைப் பேண நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.