நான்கு தனியார் நிறுவனங்களாக பிரிக்கப்படவுள்ள இலங்கை மின்சார சபை

நான்கு தனியார் நிறுவனங்களாக பிரிக்கப்படவுள்ள இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபையை நான்கு நிறுவனங்களாக பிரித்து நிர்வகிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் இலங்கை மின்சார சபை எந்தக் கட்டத்திலும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்படவோ, தனியார் மயப்படுத்தப்படமாட்டாது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போதைய நிலையில் மின்சார சபையின் நிர்வாகம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு மின்சார சபை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, நான்கு நிறுவனங்களாக செயற்படவுள்ளது.

நான்கு தனியார் நிறுவனங்களாக பிரிக்கப்படவுள்ள இலங்கை மின்சார சபை | Ceb Split Four Private Companies

குறித்த நான்கு நிறுவனங்களும் ஒட்டுமொத்தப் பங்குகளும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நான்கு தனியார் நிறுவனங்களாக தற்போதைக்கு இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.