இரகசிய தகவலால் மசாஜ் நிலையத்தில் சிக்கிய பெண்கள்

இரகசிய தகவலால் மசாஜ் நிலையத்தில் சிக்கிய பெண்கள்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்புல்தெனிய மற்றும் ஸ்டேன்லி திலகரத்ன ஆகிய பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் மிரிஹான பொலிஸாரால் நேற்று (28) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரகசிய தகவலால் மசாஜ் நிலையத்தில் சிக்கிய பெண்கள் | Women Caught In Massage Centre After Tip Off

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையங்களின் உரிமையாளர்கள் இருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மசாஜ் நிலையங்களின் உரிமையாளர்கள் இருவரும் தெய்யந்தர மற்றும் இராஜகிரிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 50 வயதுடையவர்கள் ஆவர்.

கைதுசெய்யப்பட்ட 3 பெண்களும் ராகமை, இரத்மலானை, மற்றும் அங்குனுகொலபெலெஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.