
ரணிலின் வழக்கு ; நீதிமன்றில் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் பொலிஸ் அதிகாரி ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் களுத்துறை நகர சபையின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோட்டை நீதிமன்றம் அருகே போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இதன்போதே பொலிஸ் அதிகாரி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.