கள்ள காதலால் பறிபோன உயிர்; காதலன் வெறிச்செயல்!

கள்ள காதலால் பறிபோன உயிர்; காதலன் வெறிச்செயல்!

 கள்ள காதலால் காதலி வாயில் வெடிவைத்து காதலன் கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலதில் அரங்கேறியுள்ளது.

சமீபத்தில் திருமணமான பெண் ஒருவரே தகாத உறவால் கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கள்ள காதலால் பறிபோன உயிர்; காதலன் வெறிச்செயல்! | Boy Kills Girlfriend Putting Explosive Her Mouth

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹன்சூர் தாலுகா ஹிரசனஹில் கிராமத்தை சேர்ந்த ரக்‌ஷிதா (வயது 20). இவருக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது.

இதனிடையே, ரக்‌ஷிதாவுக்கும் அவரது உறவுக்கார இளைஞரான அதே கிராமத்தை சேர்ந்த சித்தராஜு என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

கள்ள காதலால் பறிபோன உயிர்; காதலன் வெறிச்செயல்! | Boy Kills Girlfriend Putting Explosive Her Mouth

இந்நிலையில், ரக்‌ஷிதாவும் அவரது கள்ளக்காதலனான சித்தராஜுவும் திங்கட்கிழமை (25) அன்று ஹிர்யா கிராமத்தில் உள்ள விடுதி ஒன்று சென்றுள்ளனர். விடுதியில் வைத்து ரக்‌ஷிதாவுக்கும் சித்தராஜுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த சித்தராஜு தான் மறைத்து கொண்டுவந்த வெடிமருந்தை ரக்‌ஷிதாவின் வாயில் அடைத்து அதை வெடிக்கச் செய்ததில், ரக்‌ஷிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கள்ள காதலால் பறிபோன உயிர்; காதலன் வெறிச்செயல்! | Boy Kills Girlfriend Putting Explosive Her Mouth

இதையடுத்து, அறையில் வெடிசத்தம் கேட்டு லொட்ஜ் ஊழியர்கள் விரைந்து சென்று தப்பியோட முயற்சித்த சித்தராஜுவை பிடித்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து சென்ற பொலிஸார், சித்தராஜுவை கைது செய்துள்ளனர்.

அதோடு சடலமாக கிடந்த ரக்‌ஷிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.