உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு

உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு | Restaurant Owner Shot In Gunfire Attack

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், இந்தச் சம்பவத்தில் கைத்துப்பாக்கி ஒன்று பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான உணவக உரிமையாளர், துப்பாக்கிதாரியுடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், சந்தேக நபர் தப்பியோடியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் கைத்துப்பாக்கி ஒன்று, நான்கு தோட்டாக்கள் மற்றும் வெற்று ரவைகள் கண்டெடுக்கப்பட்டன.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேக நபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.