
யாழில் இளம் குடும்பஸ்தரின் திடீர் மரணத்தால் அதிர்ச்சி ; உறவினர் வீட்டில் நடந்த அசம்பாவிதம்
யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25) இரவு உயிரிழந்துள்ளார்.
அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று அதிகாலை 3.00 மணியளவில் அங்கு இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.