நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேல் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை | Today Weather Forecast Meteorology Dept In Tamil

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.