பிற்பகலில் ரணிலின் வழக்கு; முன்னிலையாக உள்ள 300 சட்டத்தரணிகள் ! பரபரப்பில் தென்னிலங்கை

பிற்பகலில் ரணிலின் வழக்கு; முன்னிலையாக உள்ள 300 சட்டத்தரணிகள் ! பரபரப்பில் தென்னிலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) பிற்பகல் 1 மணிக்கு எடுக்கப்படவுள்ளதாக  கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வு திணைகளத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் 26 ஆம் திகதிவரை விளக்கறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில் உடல் சுகயீனம் காரணமாக கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிற்பகலில் ரணிலின் வழக்கு; முன்னிலையாக உள்ள 300 சட்டத்தரணிகள் ! பரபரப்பில் தென்னிலங்கை | Former President Ranil S Case In The Afternoon

அதேவேளை  ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் சுமார் 300 சட்டத்தரணிகள் முன்னிலையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

மேலும்   ரணிலின்  வழக்கால் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு  பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தென்னிலங்கை இன்று பரபரப்பில்  உள்ளமை  குறிப்பிடத்தக்கது.