கவனக்குறைவால் உயிரை இழந்த இளைஞன் ; நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்

கவனக்குறைவால் உயிரை இழந்த இளைஞன் ; நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்

மத்தேகொட பொலிஸ் பிரிவின் 342வது வீதியில் சல்காஸ் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டாவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கவனக்குறைவால் உயிரை இழந்த இளைஞன் ; நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் | Young Man Dies In Seconds Due To Neglect

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 30 வயதுடைய  இளைஞன் பலத்த காயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மத்தேகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.