பல அடுக்கு பாதுகாப்பில் கொழும்பு கோட்டை நீதிமன்றம் ; கடுமையாக்கப்பட்டுள்ள சோதனை

பல அடுக்கு பாதுகாப்பில் கொழும்பு கோட்டை நீதிமன்றம் ; கடுமையாக்கப்பட்டுள்ள சோதனை

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்துக்கு நுழையும் பிரதான வீதியின் இரு பக்கங்களும் இரும்பு வேலிகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளதுடன்  போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி குறுக்கு வீதிகளும் இரும்பு வேலிகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் குடியிருப்புகள், வியாபார நிலையங்கள் மற்றும் வேலைத்தங்களுக்கு செல்வோர் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

அத்துடன், நீதிமன்றத்துக்கு செல்வோர் கடுமையான உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஏனையோரை செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

 கடந்த வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (26) வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர், இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் இவ்வாறு, கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,