கருப்பையை அகற்ற சென்ற தாய்க்கு நடந்த பெரும் துயரம் ; தனியார் வைத்தியசாலையில் சம்பவம்

கருப்பையை அகற்ற சென்ற தாய்க்கு நடந்த பெரும் துயரம் ; தனியார் வைத்தியசாலையில் சம்பவம்

தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த தாயின் மரணம் தொடர்பாக  மூன்று பேர் கொண்ட சிறப்பு தடயவியல் வைத்தியர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்த உள்ளது.

காலி நீதவான் இந்த பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருப்பையை அகற்ற சென்ற தாய்க்கு நடந்த பெரும் துயரம் ; தனியார் வைத்தியசாலையில் சம்பவம் | Tragic Incident After Mom S Surgery In Hospital

காலியைச் சேர்ந்த, 46 வயதான செவ்வந்தி வயிற்று வலி காரணமாக ஹிம்புராலவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  கருப்பைக்கட்டியை குணப்படுத்த அவரது கருப்பையை அகற்ற வேண்டும் என்று ஒரு மகளிர் வைத்திய நிபுணர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சத்திரசிகிச்சையின் போது குறித்த தாயின் உடல்நிலை மிகவும் மோசமாகியதுடன் இதனால் அவர் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கராப்பிட்டியில் உள்ள வைத்தியர்கள் முயற்சித்த போதும், அவரது மூளைக்கு இரத்தம் செல்வது தடைப்பட்டதால் அண்மையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.