பணிப்புறக்கணிப்பை கைவிட்ட ஊழியர்கள்; வழமைக்கு திரும்பிய தபால் சேவை

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட ஊழியர்கள்; வழமைக்கு திரும்பிய தபால் சேவை

இலங்கை தபால் திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்ட 7நாள் வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்ததை அடுத்து தபாலகங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

நாடளாவிய ரீதியில் கடந்த 7 நாட்களாக 19 கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட ஊழியர்கள்; வழமைக்கு திரும்பிய தபால் சேவை | Off Strike Lanka Postal Service Returns To Normal

இரண்டாவது கைரேகை மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவு உள்ளிட்ட பிற பிரச்சினைகளில் எந்த மாற்றங்களையும் செய்ய அமைச்சர் உடன்படவில்லை என்றும், இது தொடர்பாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தற்போதுள்ள சட்டத்தின்படி விவாதிக்கப்படுள்ளது.

இந் நிலையில் நேற்று பிற்பகலுடன் தபால் திணைக்கள ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் முடிவிற்கு வந்ததை அடுத்து தபால் சேவைகள் மீண்டும் இன்று வழமைக்கு திரும்பியுள்ளன.

 இதே வேளை நுவரெலியாவில் அமைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியினுள் வெற்றிலை எச்சில் துப்பப்பட்ட நிலையில் கடிதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.