
நாட்டில் இன்றும் வெப்ப எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு வானிலை ஆய்வு திணைக்களம், வெப்ப வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு - மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, வெயிலில் நீண்ட நேரம் செயற்படுவதும், வெளிப்புற நடவடிக்கைகளும் சோர்வை ஏற்படுத்தும்.
அத்துடன், தொடர்ந்து வெயிலில் செயற்படுவது, வெப்பப் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.