
பணியிலிருந்த ஊழியர் ரயிலில் மோதி பலி
மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதவாச்சி, யாகவெவ பகுதியில் , கொழும்பு கோட்டையிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயிலில் மோதி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மதவாச்சி, யாகவெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்தபோது, சம்பந்தப்பட்ட நபர் ரயில்வே கேட்டில் தற்காலிக கேட் கீப்பராக பணியில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.