
மட்டக்களப்பில் வீடொன்றில் காணமல்போன தங்க நகைகள்: வசமாக சிக்கிய இளைஞர்
மட்டக்களப்பில் வீடொன்றில் தங்க நகைகளை திருடிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுளு்ளனர்.
குறித்த சம்பவம் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞர், அவரது நண்பன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 16 பவுண் தங்க நகை திருடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த 18 வயது இளைஞன் தாய், தந்தையை இழந்த நிலையில் அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து படிக்க வைத்து பராமரித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளதையடுத்து பொலிஸ் நிலையத்தில் உறவினார்கள் முறைப்பாடு செய்ததன் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இளைஞன் சந்தேகநபர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவதினமான வெள்ளிக்கிழமை குறித்த இளைஞனையும், அவரது நண்பனையும் மற்றும் திருடிய தங்க ஆபரணத்தை சட்டவிரோதமாக வாங்கிய காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து அவர்களை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.