டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செல்லாதாக்க தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை உள்ளிட 31 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்திற்கு எதிர்ப்பு | Opposition To The Digital Identity Card Project

ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் இது தொடர்பாக இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், பொதுமக்களுக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தெரிவிக்காமல் அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை குடிமக்களின் பயோமெட்ரிக் தரவை இந்தியா அணுக அனுமதிக்கும் என்றும், இதன் மூலம் இந்தியா இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட அனுமதிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்முதல் செயல்முறைக்கு மாறாக, திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.