கடமையில் இருந்த காவல்துறை அதிகாரியை மோதித்தள்ளிய வான்

கடமையில் இருந்த காவல்துறை அதிகாரியை மோதித்தள்ளிய வான்

களுத்துறையில் (Kalutara)  கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ​​வான் ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

களுத்துறை வடக்கு காவல்துறை பொறுப்பதிகாரியும், தலைமை கண்காணிப்பாளருமான துசார சில்வா, சிறப்பு சோதனை நடவடிக்கை பணியில் ஈடுபட்டிருந்தபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்தபோது, ​​வஸ்கடுவ, வாடியமன்கட பகுதியில் நேற்று (22) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காயமடைந்த காவல்துறை அதிகாரி சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாணந்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடமையில் இருந்த காவல்துறை அதிகாரியை மோதித்தள்ளிய வான் | Police Oic Injured In Van Collision While On Duty

இந்த நிலையில் விபத்துடன் தொடர்புடைய வான் காவல்துறை காவலலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.