தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கரையோர மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்படும்  நிறுத்தப்படும் என தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது. 

க​ரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும் நாளை (24) பல தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர க​ரையோர மார்க்கத்தின் பல தொடருந்து சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா அறிவித்துள்ளார்.

அதன்படி, காலி தொடருந்து நிலையத்திலிருந்து காலை 05.15 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட தொடருந்து எண் 8319 மற்றும் மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து நண்பகல் 12.10 மணிக்கு காலிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட தொடருந்து எண் 8788 ஆகிய தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு | Train Services Canceled Notice For Passengers

காலி தொடருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட தொடருந்து எண் 8327 சமுத்திரதேவி காலி தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 06.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும்.

காலி தொடருந்து நிலையத்திலிருந்து அதிகாலை 04.10 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் தொடருந்து எண் 8320, காலை 08.50 மணிக்கு காலிதொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.