ரணிலை காண மஹிந்த ராஜபக்ஷவும் சிறைச்சாலைக்கு வருகை

ரணிலை காண மஹிந்த ராஜபக்ஷவும் சிறைச்சாலைக்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.

நேற்றையதினம் கைது செய்யப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்துள்ளார்.

ரணிலை காண மஹிந்த ராஜபக்ஷவும் சிறைச்சாலைக்கு வருகை | Mahinda Rajapaksa Also Visits Prison To See Ranil

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.

அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் உள்ள ரணிலை காண பல அரசியல்வாதிகளும் அங்கு சென்றுள்லதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.