யாழில் இளம் குடும்பப் பெண்ணின் திடீர் மரணத்தால் பெரும் துயரம்

யாழில் இளம் குடும்பப் பெண்ணின் திடீர் மரணத்தால் பெரும் துயரம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பூநகரி - ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்பப் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

யாழில் இளம் குடும்பப் பெண்ணின் திடீர் மரணத்தால் பெரும் துயரம் | Young Mother S Sudden Death In Jaffna Brings Grief

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வலது காலில் வீக்கம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் காலில் வீக்கம் ஏற்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.