யாழ்ப்பாணத்தில் விடுமுறை நாளில் பாடசாலை - வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் விடுமுறை நாளில் பாடசாலை - வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள பாடசாலைகள் எதிர்வரும் சனிக்கிழமை இயங்கும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

நல்லூர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

அதற்கான பதில் பாடசாலையை எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் விடுமுறை நாளில் பாடசாலை - வெளியான அறிவிப்பு | Special School Holiday For Jaffna Last Week

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால் விசேட விடுமுறை வழங்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.